சென்னையில் உள்ள வாக்குசாவடிகளில் சிசிடிவி கேமிராக்கள் பொறுத்துவது உட்பட அனைத்து பணிகளும் நாளை மாலைக்குள் நிறைவு பெறும் என்று மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
பெண்கள் மட்டுமே பிரத்யேகமாக வாக்களிக்கும் வகையில் சென்னை முழுவதும் 16 சட்டமன்ற தொகுதிகளில் தலா ஒரு வாக்குச்சாவடி வீதம் 16 பிங்க் வாக்குச்சாவடிகள் அமைக்கப்படவுள்ளதாகவும் அவர் கூறினார்.